» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கடன்தொல்லையால் 6 வயது மகளை கொன்று தற்கொலை செய்த தம்பதி

சனி 12, ஜனவரி 2019 1:51:49 PM (IST)

ஒரு தம்பதி, கடன் தொல்லை காரணமாக தங்களது 6 வது மகளை கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் திருமால் நகர் 5வது தெருவில்  கடந்த 4 மாதங்களாக வசிப்பவர் சமீல் அகமது. இவரது மனைவி தபு. இவர்களுக்கு 6 வயது மகள் சமீம் தாஜ். சமீல் அகமது, விநாயகபுரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது வீடு உள்தாழிடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்து நேற்று முதல் யாரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சந்திரிகா, புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின் விசிறியில் சமீல் அகமது,தபு, குழந்தை சமீம் தாஜ் ஆகியோர் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக, 3 பேரின் சடலங்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், செல்போன் கடை வைத்திருந்த சமீம் அகமது, அதிக கடன் சுமையால் அவதிப்பட்டதாவும், அதனால், தமது 6 வயது மகளை மின் விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்தபின் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing


CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory