» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடா்பில்லை : முதல்வர் பழனிச்சாமி விளக்கம்

சனி 12, ஜனவரி 2019 1:18:11 PM (IST)

கொடநாடு பங்களா தொடா்பாக வெளியான வீடியோவில் உண்மை இல்லை என்று பழனிசாமி விளக்கம் அளித்துள்ளாா்.முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வா் . 

2017ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்டதும், எஸ்டேட்டில் இருந்த பொருட்கள் கொள்ளயடிக்கப்பட்ட விவகாரம் குறித்தும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இந்த விவகாரத்தை ஆவணப்படமாக பதிவு செய்து வெளியிட்ட தெகல்கா பத்திாிகையின் முன்னாள் ஆசிாியா் மேத்யூஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணமும், நகையும் இருந்தது புலனாய்வில் தொிய வந்துள்ளது என்று தொிவித்தாா். 

இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், கருத்துகளும் நிலவி வந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வா் ஓ.பன்னீர் செல்வமும், செய்தியாளா்களை சந்தித்து விளக்கம் அளித்தனா். அப்போது முதல்வா் பழனிசாமி கூறுகையில், கொடநாடு சம்பவம் கொள்ளை தொடா்பாக வெளியான வீடியோவில் சொல்லப்பட்ட தகவல்களில் உண்மை இல்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்விவகாரத்தின் பின்னணியில் உள்ளவா்கள் யாா் என்பது விரைவில் கண்டறியப்படும் .கொடநாடு சம்பவத்துக்கும், எனக்கும் தொடா்பு இல்லை என அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education

crescentopticals
Thoothukudi Business Directory