» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சபரிமலை புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் : சுரேஷ்கோபி பேட்டி

சனி 12, ஜனவரி 2019 12:51:34 PM (IST)

சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் கட்டாயம் தண்டிப்பார் என்று நடிகரும்,  எம்.பி.யுமான சுரேஷ்கோபி கூறினார். 

ன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடிகரும், மேல்சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபி ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.அதற்கான திறப்பு விழா நடந்தது. இதில் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு மின் கோபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சபரிமலை வி‌ஷயத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரும் 22ம் தேதி கருத்து கூறிய பிறகே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசிற்கு ஓட்டு போட்டது தவறாகிவிட்டது என மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது. இந்த எண்ணம் நல்ல ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. அவர்கள் கடவுளை மதிக்காமல், ஆசாரங்களை மதிக்காமல் செயல்படுகின்றனர்.இதுநாள் வரை ஆச்சாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் நிச்சயம் தண்டிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape TailorsThoothukudi Business Directory