» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் : ஓரே நாளில் 1.45 லட்சம் பேர் பயணம்

சனி 12, ஜனவரி 2019 12:16:12 PM (IST)



அரசு சிறப்பு பேருந்துகளில் நேற்று 1.45 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து வெளியூர்க்கு சென்றனர்

போகி, பொங்கல்,மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், இதனுடன் சேர்த்து சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒருவாரம் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கிராமங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்பதால் அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு சொந்த ஊர் திரும்புவது வழக்கம்.

இதனால் சென்னை பேருந்து, மற்றும் ரெயில்  நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் இம்முறையும் தமிழகஅரசு சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கி இயங்கிவருகின்றன. பயணிகளின் வசதிக்காக 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஜனவரி 11-ந்தேதியில் இருந்து ஜனவரி 14-ந்தேதி வரை 14,263 பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் மேலும் இதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே. நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மட்டும் அரசு சிறப்பு பேருந்துகளில் 1.45 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து வெளியூர்க்கு சென்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Anbu Communications

New Shape Tailors



Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory