» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறைக்கு எதிராக டிக்டாக்கில் அவதூறு வீடியோ : விருதுநகர் இளைஞர்கள் கைது

வெள்ளி 11, ஜனவரி 2019 8:20:55 PM (IST)

காவல்துறைக்கு எதிராக டிக்டாக்கில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக விருதுநகர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதிபாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பதற்காக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் இருந்து சிலர் செல்ல முயன்றனர். அதற்காகத் தங்களுடைய வாகனத்துக்கு அனுமதி பெறுவதற்காக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்றனர். அப்போது துலுக்கபட்டியை சேர்ந்த முருகேசன், தங்கேஸ்வரன், ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த குருமதன் ஆகியோர் காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் தனது செல்போனில் படம் பிடித்தாராம். 

காவல்நிலையத்துக்குள் நுழையும்போது காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் டிக்டாக் செயலியில் சினிமா வசனங்களை இணைத்து காவல்துறை குறித்து அவதூறான கருத்துகளை வாட்ஸ் அப் மூலம் பரப்பியுள்ளார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் காவல்துறையினர் மீது அவதூறு பரப்பியதாக முருகேசன், தங்கேஸ்வரன், குருமதன், ஈஸ்வரன் ஆகிய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam PasumaiyagamCSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory