» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியதே தி.மு.க தான் : முதல்வர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

வெள்ளி 11, ஜனவரி 2019 2:19:32 PM (IST)

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியதே தி.மு.க தான். தி.மு.கவில் ஒரு குடும்பத்தினர் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடித்துக் காட்டி பேசினார்.

சென்னை ராயப்பேட்டையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசும்போது மற்ற கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. திமுகவை எடுத்துக் கொண்டால் கருணாநிதி இருந்தார். தற்போது ஸ்டாலின் இருக்கிறார். இனி உதயநிதி வரப் போகிறார். மகள் கனிமொழிக்கு எம்.பி., பதவி கொடுத்தனர். இதேபோல் தயாநிதி மாறன் மு.க.அழகிரி என பதவிக்கு வர முடிந்தது. அதிமுகவில் தான் சாதாரண தொண்டனும் ஆட்சிக்கு வர முடியும். 

உள்ளாட்சி தேர்தலை நாங்கள்தான் தள்ளி வைத்ததாக கூறி வருகிறார்கள். தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பது தி.மு.க தான். உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியதே தி.மு.க தான். கொல்லைப்புறத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். தமிழக மக்களுக்கு துரோகம் செய்பவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

CSC Computer Education


Joseph Marketing

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory