» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பேட்ட வெளியானது : திரையுலகம் அதிர்ச்சி

வியாழன் 10, ஜனவரி 2019 7:53:03 PM (IST)

பேட்ட படத்தை சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இது ரஜினிரசிகர்களையும், திரையுலகத்தையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது பேட்ட திரைப்படம். பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

அண்மையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தை இணையதளம் மற்றும் லோக்கல் கேபிள் டிவிகளில் வெளியிட தடை விதித்தது. 

இந்நிலையில் பேட்ட திரைப்படம் வெளியான முதல் நாளன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியாகியுள்ளது. மேலும் இதனுடைய தெலுங்கு பதிப்பும் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டிருப்பது திரையுலகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 


மக்கள் கருத்து

ஒருவன்Jan 11, 2019 - 02:13:27 PM | Posted IP 141.1*****

சினிமா ஒரு பொழுது போக்கு தான், நாட்டுக்கு ரொம்ப முக்கியம் அல்ல .. டிஜிட்டல் இந்திய நா அப்படிதான் இருக்கும் ..

நிஹாJan 11, 2019 - 10:16:15 AM | Posted IP 141.1*****

இதில் புதிதாக அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

CSC Computer Education

Joseph Marketing

crescentopticals



Thoothukudi Business Directory