» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவை கூட்டத்தை நாளையும் நீட்டித்திருக்க வேண்டும் : எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்

வியாழன் 6, டிசம்பர் 2018 8:44:48 PM (IST)

மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாகக் கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கஜா புயல் பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக நாளையும் நீட்டித்திருக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

மேக்கே தாட்டூவில் அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானம் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்துக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றித் தந்துள்ளோம். அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியிருக்கும்  

ஒரு கண்டனத் தீர்மானமாக இதை நிறைவேற்றி இருந்தால், அது முழு அளவில் நிறைவடையக் கூடிய வகையில் இருக்கும் என்ற கருத்தை எடுத்துச் சொன்னேன். அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நாங்கள் ஆதரித்து நிறைவேற்றித் தந்திருக்கிறோம். நாளையும் இந்த அவையை நீட்டிக்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நான் ஒரு வேண்டுகோளை எடுத்து வைத்தேன். அந்த வேண்டுகோளை பேரவைத் தலைவரோ, இந்த அரசோ ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அதை தி.மு.க சார்பில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals



New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing





Thoothukudi Business Directory