» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடிவிழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்

புதன் 5, டிசம்பர் 2018 10:14:19 AM (IST)மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் 2018-19 ஆண்டுக்கான சக்திமாலை இருமுடிவிழாவை லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவிற்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்திமாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்கின்றனர். ஐந்து அல்லது மூன்று நாள் விரதம் இருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக எந்த வித ஜாதிமத பேதமின்றி இருமுடி செலுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டும் இன்று டிசம்பர் 5ஆம் தேதி துவங்கும் இந்த இருமுடி விழா வருகிற ஐனவரி மாதம் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை அடுத்து ஐனவரி 2019, 21ஆம் தேதி அன்று ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.00 மணி அளவில் மங்கள இசையுடன் விழா துவங்கியது. 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலை 6.00 மணிக்கு இருமுடி அபிஷேகத்தை ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதியர்களும் அபிடேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிடேகம் செய்தனர். விழாவிற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தகவல் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, சுற்றுப்புற சுகாதாரம், தீயணைப்பு வாகன ஏற்பாடு முதலிய பல ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட செவ்வாடைத் தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வருகிறார்கள். இன்று துவங்கி விழா முடியும் வரை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் நடைபெறும் என உணவுக்குழுப் பொறுப்பாளர் கூறினார். பல்வேறு இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் வர இருக்கின்றனர். தென்னக இரயில்வே பல சிறப்பு இரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருத்தூரில் நின்று செல்கின்றன. விழா ஏற்பாடுகளை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் துணைத் தலைவர்கள் கோ.ப.செந்தில்குமார் மற்றும் ஸ்ரீதேவி ரமேஷ் பொறுப்பில் ஆன்மிக இயக்கத்தின் பல்வேறு குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

LathakuttyDec 7, 2018 - 04:35:10 PM | Posted IP 157.5*****

We have to walk long distance to reach karuvarai.small children old people couldn't do it.plz minimise the distance

சுந்தர்Dec 6, 2018 - 08:23:16 AM | Posted IP 106.1*****

மேல்மருவத்தூர் நிகழ்ச்சி களை உடனுக்குடன் தெரிவித்து உள்ளது நன்றி

VijayDec 5, 2018 - 11:19:22 AM | Posted IP 27.62*****

Omsakthi super message

SIVASUBRAMANIANDec 5, 2018 - 11:15:45 AM | Posted IP 162.1*****

ஓம் சக்தி பாரா சக்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes

CSC Computer Education


Nalam PasumaiyagamThoothukudi Business Directory