» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிலம்பரசன் புது யோசனை

புதன் 21, நவம்பர் 2018 7:34:50 PM (IST)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் நடிகர் சிம்பு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். 

கஜா புயலின் பாதிப்புகளிலிருந்து டெல்டா மக்கள் மீள்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றன. இந்த நிலையில், இது தொடர்பான யோசனை ஒன்றை தெரிவித்து நடிகர் சிம்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.  அதில், டெல்டா பிரச்சனை பற்றி அனைவருக்கும் தெரியும்.  நிறைய பேர் உதவி செய்கிறார்கள். இதுமாதிரியான பிரச்னையில் நாம் கொடுக்குற பணம் போய் சேருகிறதா இல்லையா ?. காசு அவர்களுக்கு உதவியாக உள்ளது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. 

தமிழ்நாட்டில் எல்லா மக்களும் உதவி பண்ண எனக்கு ஒரு வழி தோன்றியது. எல்லாரும் செல்போன்  வைத்துள்ளோம். முடிந்தவர்கள் 100 ரூபாயும், முடியாதவர்கள் 10 ரூபாயும் செல்போன் நெட்வொர்க் மூலம் காசு கொடுக்க வழி உள்து.இதற்கு அனைத்து நெட்வொர்க்கும் இணைந்து யார் எவ்வளவு காசு கொடுத்துருக்காங்கனு பட்டியலை காட்டி, அந்த பணத்தை நாங்கள் டெல்டாவுக்கு அனுப்பியிருக்கிறோம் என அரசு வெளிப்படையாக காட்டுவதாக இருந்தால் அது நடந்தால், நாம் எல்லோரும் சேர்ந்து இதை செய்ய முடியும். சேவ் டெல்டா என்று பேசியிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing


Black Forest CakesNalam Pasumaiyagam

New Shape Tailors

Anbu Communications
Thoothukudi Business Directory