» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

படத்தை கண்டு பயப்படும் அளவிற்கு பலவீனமான அரசாங்கமா ? நடிகை வரலட்சுமி கேள்வி

வெள்ளி 9, நவம்பர் 2018 8:08:08 PM (IST)

ஒரு படத்தை கண்டு பயப்படும் அளவிற்கா அரசாங்கம் பலவீனமாக உள்ளது என சர்கார் பட விவகாரத்தில் நடிகை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தபடத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை படம் விமர்சிப்பதாகவும் ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. கோமளவல்லி என்ற பெயர் வரும் இடத்தில் கோமள என்ற சொல்லுக்கு மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 56 வருடம் என்ற சொல் நீக்கப்பட்டு மறு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 

சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், படத்தில் சர்கார் படத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு படத்தைப் பார்த்து பயப்படும் அளவுக்கா இந்த அரசாங்கம் வலுவற்றதாக இருக்கிறது? நீங்களே உங்கள் நற்பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். எதை செய்யக்கூடாதோ அதையே செய்து கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து இத்தகைய முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். படைப்பாற்றலின் சுதந்திரத்தை பறிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

NairNov 11, 2018 - 12:19:41 PM | Posted IP 103.8*****

thinkable question?

Ananth kumarNov 10, 2018 - 12:19:34 PM | Posted IP 172.6*****

Correct

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Black Forest Cakes


CSC Computer EducationAnbu CommunicationsThoothukudi Business Directory