» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிகாரத்தை வைத்து அடக்க நினைப்பது எப்போதும் ஏற்புடையதல்ல : ஜிகே வாசன் பேட்டி

வெள்ளி 9, நவம்பர் 2018 7:53:11 PM (IST)

அதிகாரம் கையில் இருப்பதால் அதை வைத்து அடக்க நினைப்பது ஏற்புடையதல்ல என்று, தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே வாசன் கூறினார். 

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி.கே வாசன் வருகை தந்தார். தொடர்ந்து அவர்  செய்தியாளர்களிடம் பேசும்போது,`நம் நாட்டில் அதிகமான கஷ்ட நஷ்டம் உள்ளதாக பட்டாசுத் தொழில் ஆகிவிட்டது. சீனப் பட்டாசுகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் நேரத்தில் பட்டாசு வெடித்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை போடப்பட்ட வழக்குகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். 

பல்வேறு முக்கியத் திட்டங்களை கிடப்பில் போடப்பட்டும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கத் தவறியதாகவும் அ.தி.மு.க அரசு உள்ளது.எந்தத் துறையைச் சார்ந்தவர்களும் அரசியலுக்கு வரலாம். அதில் சினிமாத்துறையும் ஒன்றுதான்.  சினிமா நடிகர்கள் இங்கு வருவதால், யாரும், யாரையும் மிரட்டவோ உருட்டவோ முடியாது. என்றார். அதிகாரம் கையில் இருப்பதால் அதை வைத்து அடக்க நினைப்பது எப்போதும் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors

CSC Computer Education
Thoothukudi Business Directory