» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சா்காா் படத்தில் சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் ?

வியாழன் 8, நவம்பர் 2018 7:45:10 PM (IST)

சா்காா் படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் சா்காா். இப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்கள் குறித்த சா்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிா்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமளவள்ளி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் பெரும் சா்ச்சையை கிளப்பின. சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அமைச்சா்கள், அ.தி.மு.க.வினா் நேற்று கோாிக்கை வைத்தனா். இந்நிலையில் மதுரை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சா்காா் படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அ.தி.மு.க.வினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். 

இதனைத் தொடா்ந்து கோவை மேற்கு மண்டல திரையரங்க உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சா்காா் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சா்ஸ் நிறுவனத்திடம் கோாிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சா்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டால் மட்டுமே படத்தை திரையிட அனுமதிப்போம் என்று அ.தி.மு.க.வினா் தொிவித்து வந்த நிலையில் தற்போது காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications






Black Forest Cakes



Thoothukudi Business Directory