» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசன், கிருஷ்ணசாமியை கைது செய்ய வேண்டும் : நாடார் அமைப்பினர் புகார்

வியாழன் 8, நவம்பர் 2018 7:34:43 PM (IST)

சாதிய மோதல்களைத் தென் தமிழகத்தில் உருவாக்கும் கமல்ஹாசன் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கைது செய்ய வேண்டும் என்று நாடார் மக்கள் சக்தி அமைப்பு புகார் அளித்துள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனுக்கு எழுதிய கடிதத்தில், தேவர் மகன் 2  படத்திற்கு ‘தேவேந்திரர் மகன் என்று பெயரிடுங்கள்; படத்திற்கும் பெயர் வரும், உங்களுக்கும் பெயர் வரும். ஒருவேளை தேவர் மகன் 2 என்று பெயரிடுவதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்கள், முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிகமிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். தேவேந்திரர் மகன் என்ற பெயரில் படம் எடுங்கள், அது ஓடும்; ஆனால் தேவர் மகன் 2 என்று படம் எடுத்தால், ஓடாது; மாறாக அது முடங்கும் என்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடார் மக்கள் சக்தி அமைப்பினர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், சாதிய மோதல்களைத் தென் தமிழகத்தில் உருவாக்கும் உள்நோக்கத்தோடு தொடர்ந்து ஜாதியின் பெயரை படத்தின் பெயராக வைத்தும், ஒரு சாதியினரை மட்டும் உயர்த்திக் காட்டி மற்ற சாதியினர் இடையே கலவரத்தை தூண்டும் நடிகர் கமல்ஹாசன் மற்றும், அதே போல் தேவேந்திரன் மகன் 2 எனப் பெயரை வைக்கத் தூண்டும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அருண்Nov 10, 2018 - 08:14:25 PM | Posted IP 27.62*****

ஒன்னும் ஆவாது.... படம் எடுக்குறவன் அவன் விளம்பரத்துக்கு எடுக்கிறான்... அப்பிடியே போகட்டும் அவன்.... நம்ம நடந்துகிறதுலதான் இருக்கு நம்ம இனத்தோட அடையாளம்.... இதுல சண்டை போட்டா நமக்கு தான் அசிங்கம்.!! நம் வீட்டு பிள்ளைங்களை ஒழுக்கமாய் வளர்ப்போம்.. நம் இன அடையாளம் காப்போம்.!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory