» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய்யின் சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் : திரையரங்குகளில் போலீஸ் குவிப்பு

வியாழன் 8, நவம்பர் 2018 5:26:58 PM (IST)

விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதால் கோவை, மதுரையில் திரையரங்குகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல தடைகளைத் தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி, தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

மதுரையில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மதியம் சர்கார் படம் ஓடிய அண்ணாநகர் சினிப்ரியா காம்ப்ளக்ஸ் தியேட்டர் முன் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும், சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளையும், காட்சிகளையும் நீக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதனால், தியேட்டர் முன் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனடியாக குவிக்கப்பட்டனர். அதிமுகவினர் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

அதிமுகவினர் போராட்டத்தால் சினிப்பரியா தியேட்டரில் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் மதியம் 2 மணி படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதற்கான அறிவிப்பும் தியேட்டர் முன் ஒட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். தியேட்டருக்கு சர்கார் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். மதுரை மாவட்ட சர்கார் படத்தின் விநியோகிஸ்தர் அதிமுகவினர் போராட்டம் நடத்திய தியேட்டரின் உரிமையாளர் என்பதால் அந்த தியேட்டரை தேர்ந்தெடுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 
இதேபோல் கோவையில் சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையை கொண்டுள்ளது.  அதிமுகவினர் போராட்டத்தால் தென் மாவட்ட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அவசர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவினர் போராட்டம் தொடர்ந்தால் சர்கார் வசூல் பாதிக்கும் என்பதால் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பதட்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

Raja gopalan.Nov 10, 2018 - 10:58:33 AM | Posted IP 107.1*****

ADMK oru aalamaram.,

M.sundaramNov 9, 2018 - 10:42:12 AM | Posted IP 141.1*****

Arinzer Anna told we must have the moral courage and big heart to bear the adversaries. Yethaiyum thankum Idayam Vendum . But the ministers and the ruling part instigate and abet to make disturbance in public. When the posters in Pasumpon was torn case were registered . But now what the police is doing. Can they ban the screening of Parasakthi film now? Where is Kadamai, Kanniyam and Kattapadu? There is no freedom of speech in this state. Now the cartoonist has lost their enthusiasm in criticizing the day to day event because of arrest or torture by the police. very strange. Rule is not one for all now here

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory