» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் ராக்கர்ஸ் சவாலை முறியடிப்போம் : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதி

திங்கள் 5, நவம்பர் 2018 7:39:44 PM (IST)

சர்கார் படம் வெளியான அன்று மாலை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். இப்படம் தீபாவளித்திருநாளை முன்னிட்டு நாளை வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்றிலிருந்தே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் திரைப்படம் வெளியான மாலையே ஹெச்டி பிரிண்டில் இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியானது. இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், கடந்த 23-ம் தேதி ஆலோசித்து முடிவெடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 6-ம் தேதி முதல் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கினுள் எவரேனும் வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என்று ஒவ்வொரு திரையரங்கிலும்  கண்காணிக்க திரையரங்க உரிமையாளர்கள் ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அனைத்து திரையரங்கிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 

சமூக வலைதளங்களில் நம் உழைப்பைச் சுரண்டும் திருடன் தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படம் வெளியான மாலையே ஹெச்டி பிரிண்டில் வெளியிடுவதாக சவால் விடுத்துள்ளார்கள். இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு மேற்படி தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, படம்பிடிப்பவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Nov 7, 2018 - 11:28:27 PM | Posted IP 27.62*****

சும்மா கத விடாதீங்க... சைபர் கிரைம் நெனச்சா ஈஸி ஆ கண்டுபுடிச்சிடலாம்... ஊர ஏமாத்துறானுங்க....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory