» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

செவ்வாய் 23, அக்டோபர் 2018 7:13:00 PM (IST)

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட கிழக்கு பருவமழை வரும் 26-ம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதுடன், தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

அதே மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் தலா 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதே போல் நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டை, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், நாகை மாவட்டம் வேதாரண்யம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Joseph Marketing

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory