» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3பேர் உயிரிழப்பு: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

செவ்வாய் 23, அக்டோபர் 2018 4:26:02 PM (IST)

காஞ்சிபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

காஞ்சீபுரத்தில் நாகலு தெருவில் தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கு பட்டாசுக்கள் வாங்கி குவிக்கப்பட்டிருந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கிருந்த வெடிகள் வெடித்து சிதறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். 

இதற்கிடையே நாட்டுவெடிகள் தாயாரிக்கப்பட்ட போது வெடிவிபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், வீடு பலத்த சேதம் அடைந்துள்ளது. அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.  வெடிகள் வெடித்து சிதறியபோது அப்பகுதியில் நிலநடுக்கம் போன்று அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். அனுமதியில்லாமல் இதுபோன்று பலர் தீபாவளி சீட்டு நடத்தி வெடிகளையும் வாங்கி குவிக்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

CSC Computer Education

crescentopticals

Joseph Marketing




Thoothukudi Business Directory