» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர், துணை முதல்வர் பற்றி அவதூறு பேச்சு: திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

சனி 20, அக்டோபர் 2018 12:17:40 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி,  மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் தமிழக அரசு பற்றியும் அவதூறாக பேசி விமர்சனம் செய்தாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலை பாண்டிபஜார் சட்டம்-ஒழுங்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals


CSC Computer EducationThoothukudi Business Directory