» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை அப்போலா மருத்துவமனையில் பாடலாசிரியர் வைரமுத்து அனுமதி

வெள்ளி 19, அக்டோபர் 2018 7:48:48 PM (IST)

கவிஞர் வைரமுத்து, உணவு ஒவ்வாமையின் காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படப் பாடலாசிரியரும் இலக்கியவாதியுமான கவிஞர் வைரமுத்து, சமீப காலத்தில் ஆண்டாள் விவகாரம், பாடகி சின்மயியின் மீ டூ குற்றச்சாட்டுகளால் கவனிக்கப்பட்டு வந்தவர். இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருக்கும் சொந்த ஊருக்கு வந்தவர், குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார். பின்னர், மதுரையிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். 

நேற்றிரவு அவர் உட்கொண்ட உணவு ஒத்துக்கொள்ளாததால், ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில், உடனே மதுரையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், தற்போது அவர் நலமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வைரமுத்து உடல் நலம் தேறிவிட்டார், இன்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியு்ள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

New Shape Tailors

Joseph Marketing


Thoothukudi Business Directory