» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து : 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

வெள்ளி 19, அக்டோபர் 2018 7:25:31 PM (IST)

நெல்லை கங்கைகொண்டான் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 

மதுரை நாவலர் தெருவை சேர்ந்தவர் ராஜையா (65), இவரது மனைவி பாலின் தேவசகாயம் (60), பாபு முத்துராமலிங்கம் மனைவி அன்ன ஜெயசிலி(30). இவர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் மதுரையிலிருந்து பாபநாசத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கங்கைகொண்டான் அருகே ஒரு தனியார் மில் பக்கத்தில் வரும் போது, முன்னால் சென்ற ஆட்டோ மீது இவர்கள் சென்ற கார் மோதியதால் இரு தரப்பினரும் ரோட்டில் நின்று தகராறு செய்துள்ளனர். 

அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி எதிர்பாராவிதமாக மோதிய விபத்தில் ராசையா, மனைவி பாலின் தேவசகாயம், அன்ன ஜெயசிலி ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காரும் ஆட்டோவும் ஏற்கனவே மோதிக்கொண்ட நிலையில் பின்னால் வந்த வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors
Thoothukudi Business Directory