» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியலில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்: ராஜேந்திர பாலாஜி குறித்து திருநாவுக்கரசர் கருத்து

வெள்ளி 19, அக்டோபர் 2018 5:47:21 PM (IST)

கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். முதல்வரை எவ்வாறு சிபிஐ விசாரணை செய்ய முடியும்?. எனவே முதல்வர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும். ராகுல் காந்தியை கமல் சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக கூறியுள்ளார். கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு.

அரசியலில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர் பழைய படத்தை தற்போது தான் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes


New Shape Tailors

Joseph Marketing

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory