» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் நக்கீரன் கோபால்

புதன் 10, அக்டோபர் 2018 5:03:56 PM (IST)

தாம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் நேற்று புனே செல்வதற்காக சென்னை விமான நிலயத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது தேசத் துரோக வழக்கையும் காவல்  துறையினர் பதிவு செய்தனர். ஆளுநர் மாளிகை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரி பேட்டை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 

எனினும் நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நக்கீரன் கோபால் இன்று நேரில் சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக நக்கீரன் கோபால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 


மக்கள் கருத்து

சந்துருOct 10, 2018 - 09:48:25 PM | Posted IP 141.1*****

இவனுக்கு போலீஸ் என்றால் என்ன என்று உணர்த்தப்படவேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticals




Thoothukudi Business Directory