» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ரஜினிகாந்தை எம்.ஜி.ஆர். அடித்தாரா?: 25 ஆண்டு கால கேள்விக்கு நடிகை லதா விளக்கம்

வெள்ளி 21, செப்டம்பர் 2018 4:10:49 PM (IST)

ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர். ரஜினிகாந்தை அடித்தாரா இல்லையா என்பது குறித்து நடிகை லதா விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில் கால் நூற்றாண்டு காலமாக பேசப்படும் இந்த விவகாரம் குறித்து நடிகை லதா முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். நடிகை லதா நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, நான் பிற நடிகர்களுடனும் நடித்துள்ளேன். ஆனால் எங்கு சென்றாலும் எம்.ஜி.ஆர். லதா என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் பெருமையாகவே நினைக்கிறேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த பெருமை?. கமலும், ரஜினியும் எனக்கு வேண்டியவர்கள் தான். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆரை போன்று ஒருவர் இருந்ததும் இல்லை, இனி வரப் போவதும் இல்லை என்றார்.

ரஜினி நடிகை லதாவை ஒரு தலையாக காதலித்து அத்துமீறியதால் எம்.ஜி.ஆர். அவரை ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்தார் என்று கூறப்படுகிறதே என்று பேட்டியின்போது கேட்கப்பட்டது. பாவம் அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போன்று. ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்றார் லதா.

ரஜினி ரொம்ப நல்ல மனுஷன், எளிமையானவர். புகழின் உச்சியில் இருந்தால் கூட முதல் படத்தில் நடித்தபோது எப்படி இருந்தாரோ தற்போதும் அதே போன்று எளிமையாக உள்ளார். நல்ல குடும்ப நண்பர். அவர் வீட்டில் விசேஷம் என்றால் லதா ரஜினிகாந்த் என்னை அழைப்பார். நானும் போவேன். என் வீட்டில் விசேஷம் என்றால் அவர்கள் வருவார்கள் என்று லதா தெரிவித்தார். எனக்கு கார்த்திக், ஸ்ரீனிவாஸ் என்று இரண்டு மகன்கள். ஸ்ரீனிவாஸுக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். ரஜினியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால் தான் அவரையும் என்னையும் சேர்த்து பேசுகிறார்கள். அவர் அடி வாங்கியதாக இத்தனை ஆண்டுகளாக கூறுகிறார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals

Joseph Marketing
Thoothukudi Business Directory