» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டைக் காலி செய்து தராமல் இழுத்தடிக்கிறார்: மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்

வெள்ளி 21, செப்டம்பர் 2018 3:42:33 PM (IST)

வாடகைக்கு கொடுத்த வீட்டை காலி செய்யாமல் இழுத்தடிப்பதாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் காவல்துறையில் புகார் செய்துள்ளார்.  

நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகளும் நடிகையுமான வனிதாவுக்கும் இடையிலான சர்ச்சைகுரிய சண்டைகளைப் பற்றி ஊரே அறியும். வனிதா விஜயகுமார், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை விஜயகுமார், தன் மகனை கடத்தி வைத்துக் கொண்டு தன்னோடு அனுப்ப மறுத்ததாகக் காவல்துறையில் தன் தந்தை மேல் வழக்குத் தொடர்ந்த வகையில் ஊடகங்களில் பரபரப்புக் கிளப்பியவர். 

அந்தப் பரபரப்புகள் எல்லாம் ஓய்ந்து அம்மா மஞ்சுளா இறப்பின் போது இறுதி அஞ்சகி செலுத்த வந்தவரைக் கூட நடிகர் விஜயகுமாரும், வனிதாவின் சகோதர, சகோதரிகளும் புறக்கணித்தனர். இபடி தந்தைக்கும், மகளுக்குமான பிரச்னை முற்றி நீ யாரோ, நாங்கள் யாரோ ரேஞ்சில் இருந்தது அவர்களுக்கிடையிலான பந்தம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு நடிகை வனிதா, தன் தந்தைக்குச் சொந்தமான ஆலப்பாக்கம் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துப் பணி புரிந்து வந்தார். 

தற்போது திரைப்படத் தயாரிப்பு வேலைகள் முடிந்த பின்னரும், அந்த வாடகை வீட்டுக்கான ஒப்ப்ந்தம் முடிந்த பின்னரும் கூட வீட்டைக் காலி செய்து தராமல் இழுத்தடிக்கிறார். கேட்டால், வீடு தனக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டைக் காலி செய்ய மறுப்பதாகத் தகவல். இதனால் கோபமுற்ற நடிகர் விஜயகுமார், தன் சொந்த மகள் மீதே மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து மகள் வனிதாவை உடனடியாக அப்புறப்படுத்தி வீட்டைக் காலி செய்து தருமாறு காவல்துறை உதவியை நடிகர் விஜயகுமார் நாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

சாமிSep 21, 2018 - 07:22:17 PM | Posted IP 162.1*****

கேவலமான ஒரு குடும்பம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Black Forest CakesAnbu Communications


Nalam Pasumaiyagam

Joseph Marketing
Thoothukudi Business Directory