» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உதவி இயக்குநர் தீக்குளித்த விவகாரம்: நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

வெள்ளி 21, செப்டம்பர் 2018 3:38:46 PM (IST)சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையை அவதூறாக விமர்சித்ததாக கைதானார் சின்னத்திரை நடிகை நிலானி. காவல்துறையினர், நிலானி மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை நிலானிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தியைக் காதலித்து வந்தார். பிறகு கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்தார்கள். எனினும் தன்னைத் திருமணம் செய்யுமாறு காந்தி, நிலானியை வற்புறுத்தியதால் இதை எதிர்த்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நிலானி. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இரு நாள்கள் கழித்து, சென்னை கேகே நகரில், தனது உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார் காந்தி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காந்தி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்த நிலானி, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது: இரண்டு நாள்களுக்கு முன்பு காந்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பிறகு அவர் தற்கொலை செய்துகொண்டார். ஊடகங்களில் நான் தலைமறைவு என்றும் எனக்கும் காந்திக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் விடியோவுடன் செய்தி வெளியிடுகிறார்கள். அந்த விடியோவின் உண்மைத்தன்மை தெரியாமல் இதுபோன்ற செய்தி வெளியிடுவதை உடனே நிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிட்டார். 

சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த நிலானி, இன்று திடீரென பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். பிறகு, வீட்டில் மயங்கிக் கிடந்த நிலானி, காவல்துறையின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals
Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape TailorsThoothukudi Business Directory