» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளா மாநிலம் புனலூரில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டு : பெண் உட்பட 4 பேர் கைது

வெள்ளி 21, செப்டம்பர் 2018 2:18:03 PM (IST)




தமிழக கேரள எல்லையான கேரள மாநிலம் புனலூர் பகுதியில் 9 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளுடன் ஒரு பெண் உட்பட 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் கள்ளநோட்டு கும்பல் நடமாடி வருவதாக கொல்லம் புறநகர் காவல்துறை கண்காணிப்பளார் அசோகனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளநோட்டுக்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் புனலூர் பஜார் பகுதியில் ஒரு இடத்தில் சிலர் கள்ள நோட்டுகளுடன் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து உடனடியாக 50 க்கும் மேற்பட்ட போலீசார் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அந்த இடத்தில் இருந்த ராதா, பினு, குமார், சதீசன், ஆகிய 4 பேர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் சுனில் என்பவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். 

கைது செய்யப்பட்ட 4 பேர்களிடம் இருந்து 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் 9 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நோட்டுகளை அவர்களுக்கு சப்ளை செய்தவர்தான் தப்பிச்சென்ற சுனில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே சுனிலை கைது செய்தால்தான் இந்த கள்ளநோட்டுக்கள் எங்கிருந்து வந்தது. இந்த கள்ள நோட்டுக்களை அச்சடித்தவர்கள் யார்? என்பதும் அவர்களது கூட்டாளிகள் யார்? என்பதும் தெரியவரும் எனவே கொல்லம் போலீசார் கள்ளநோட்டு கும்பலின் தலைவன் சுனிலை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Anbu Communications

CSC Computer Education

Joseph Marketing




Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory