» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வரையே மிரட்டும் வகையில் வன்முறை பேச்சு: கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

வியாழன் 20, செப்டம்பர் 2018 5:52:43 PM (IST)

முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதியன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் "முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தான் அடித்துவிடுவேன் என்பதால் பயந்தார் என்றும், கூவத்தூரை அடையாளம் காட்டியவனே தான் தான்" என்று பேசினார். மேலும், "முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சவால் விடுத்திருந்தார். 

மேலும், சாதி ரீதியாகவும் சில கருத்துக்களை பேசியிருந்தார். அவரது பேச்சு ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், கொலை செய்யத் தூண்டும் வகையிலும் உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரையே அடிப்பேன் என்ற ரீதியில் பேசியது தொடர்பாக கருணாஸ் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் கருணாஸ் பேசிய வீடியோ யூ-டியூப்பில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads
New Shape Tailors


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals
Thoothukudi Business Directory