» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா நாட்டுக்கு அர்ப்பணம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 1:18:17 PM (IST)




சென்னையில் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் விஜயா இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

புதிய ரோந்துக் கப்பலான விஜயா நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரோந்து கப்பல் விஜயாவை முறைப்படி படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை தலைமை இயக்குநர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பரமேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.185 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள ரோந்து கப்பலான விஜயா 2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இக்கப்பல்களின் பெரும்பான்மையான பாகங்கள் உள்நாட்டில் தயாரி க்கப்பட்டவை என்பது சிறப்பம்சமாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals



Joseph Marketing

New Shape Tailors





Thoothukudi Business Directory