» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதி மறைவை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பாஜக இல்லை: தமிழிசை

சனி 11, ஆகஸ்ட் 2018 12:44:09 PM (IST)

கருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை  என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா. ஜனதா கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. மிக மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. அரசியலையும் கடந்து முதுபெரும் தலைவர் என்ற நிலையில் அவருக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்தது. இது எங்கள் அரசியல் பண்பாடு. எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அதற்காக கட்சியை குக்கிராமங்கள் வரை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

வருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.மத்தியில் ஆளும் மோடி அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்களின் ஆதரவு பா.ஜனதா பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேத பாதிப்புகளுக்கு உதவுவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் கேரள மக்களுக்கு உதவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

சுடலைAug 11, 2018 - 05:26:18 PM | Posted IP 162.1*****

மோடி யோக்கிய சிகாமணி...நல்லவர்...வல்லவர்...நாலும் தெரிந்த பொருளாதார மேதை...கருப்பு பணத்தை அட்ரஸ் இல்லாமல் ஒழித்தவர் .... வங்கி கணக்கில் 15 லட்சத்தை போட்டவர்.... 15 லட்சத்தை வைத்து கொண்டு ஒவொரு குடி மகனும் செல்வ செழிப்பில் மிதக்க வைத்தவர்.. காங்கிரஸ் ஆட்சியில் விண் உயரத்தில் இருந்த டீசல், பெட்ரோல் விலைகளை குறைத்து ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றியவர்...இன்னமும் தினமும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கொண்டே இருப்பவர்...ஐந்து கோடி வேலை வாய்ப்பை உருவாக்கியவர்....விவசாயிகளுக்கு ஓன்று என்றால் ஓடி போய் நிற்பவர்... இந்தியாவை டிஜிட்டல் யுகத்திற்கு மாற்றியவர்...ஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதார் எண்ணையும் hackers யாரும் crack செய்து விடாதபடி highly secured ஆகியவர்....காங்கிரெஸ்ஸால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருந்த வாரக்கடனை முழுவதுமாக வசூலித்து, வார கடன் என்று ஓன்று இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கியவர்....GST மூலம் மிக குறைந்த வரி விதிப்பு முறையை செயல் படுத்தி அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி கணிசமாக குறைய காரணமாய் இருந்தவர்.. ரபேல் போர் விமான கொள்முதலில் காங்கிரஸ் செய்த ஊழலை அம்பல படுத்தி, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை மீட்டு நாட்டுடமை ஆகியவர்... காஸ்மீரில் தீவிரவாதம் என்று ஓன்று இல்லை என்ற நிலையை உருவாக்கி, காஷ்மீரை அமைதி பூங்காவாக மாற்றியவர்.... surgical strike செய்து பாகிஸ்தானை அடி பணிய வைத்தவர்....காங்கிரஸ் ஆட்சி போல் இல்லாமல், காஷ்மீர் பார்டரில் துப்பாகி சூடு சம்பவங்கள் இப்போதெல்லாம் அறவே நடப்பதில்லை.... வெளி நாடுகளுக்கு அதிகம் செல்லாமல், இந்தியாவில் தங்கி இந்தியாவை வழி நடத்தும் தேச பக்தர்..... காந்தி அடிகளை பின்பற்றி கச்சை துணியுடன் நாட்டை வளம் வருபவர்...காற்பரெட்டு நிறுவனங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து, மக்களுக்கு சலுகைகள் அளித்து மக்களுக்காக உழைக்கும் மக்கள் தொண்டர்...இப்படி 60 வருடங்கள் காங்கிரஸ் செய்யாததை, வெறும் நான்கு வருடங்களில் துணிச்சலுடன் செய்த சாதனையாளர் மோடி மகான்!! ..... ஒரு ஏழை தாயின் மகன், டீ கடையில் வேலை செய்தவன் இப்படி எல்லாம் செய்வதை பார்த்து காங்கிரஸுக்கு வயிற்றெரிச்சல்!!.. ஆகையால் தான் இல்லாதது , பொல்லாதது சொல்லி மக்களை திசை திருப்பி, இல்லாத பகோடா கதைகளை சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறது காங்கிரஸ்...ஆனால் காங்கிரஸின் கதைகளை மக்கள் நிராகரிப்பார்கள்... அனைவரும் சொல்லுங்கள்...மோடி தான் தூய்மை இந்தியா... மோடி தான் டிஜிட்டல் இந்தியா....மோடி தான் இந்தியாவின் infrastructure ... மோடி தான் பிளாஸ்டிக் பணத்தின் முன்னோடி...மோடியே இந்தியாவின் வறுமையை ஒழித்து அடுத்த தளத்திற்கு எடுத்து செல்பவர்.... மோடி தான் கேடி....கேடி தான் மோடி.........../////இப்படிக்கு அரை டவுசர் பாய்ஸ்...

ராமநாதபூபதிAug 11, 2018 - 02:08:46 PM | Posted IP 162.1*****

இதை நாங்க நம்பனும். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஒரு அரசையே ஆட்டையை போட்டிங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors


Anbu Communications

Joseph Marketing


Black Forest Cakes
Thoothukudi Business Directory