» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவாரூர் தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு

சனி 11, ஆகஸ்ட் 2018 11:43:08 AM (IST)

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம்  ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டிலேயே இருந்த நிலையில் அவர் கடந்த 7-ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பாணை வெளியிட்டார். 

அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போல்  திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,  ஏ.கே.போஸ் கடந்த வாரம் மறைந்ததையடுத்து அந்த  தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம்  ஆகிய 2 தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory