» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆகஸ்ட் 14ம் தேதி திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் : அன்பழகன் அறிவிப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 1:08:12 PM (IST)

வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து  கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேல்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுடன், செயல் தலைவர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

அப்போது துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். அதை தொடர்ந்து அன்பழகன் வெளியிட்ட செய்திகுறிப்பில் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி (செவ்வாய்) அன்று திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் உயர்மட்டகுழுவினர் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals



New Shape Tailors



Thoothukudi Business Directory