» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதி, ஜெயலலிதா இறுதிப்பயணத்திற்கு ஒரே ஓட்டுநர்: ஆச்சர்யமான ஓர் பயணம்

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 7:30:48 PM (IST)

கடந்த செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இருவருக்கும் இறுதிப் பயணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டியது ஒருவரே என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர்  இறுதி யாத்திரைக்குத் தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட  உபகரணங்கள் வழங்குவதை தன்னுடைய வேலையாகச் செய்து வருகிறார். சென்னையில் முக்கிய பிரபலங்கள் மரணமடையும் பொழுது இவருடைய சேவைதான் அழைக்கப்படுவது வழக்கமாகும்.அப்படி இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்டோரின் இறுதி யாத்திரையில் ஆம்புலன்ஸ் இயக்கியுள்ளார். தற்போது உடல்நலகுறைவால் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையிலிருந்து, கோபாலபுரம் இல்லம், அங்கிருந்து சி.ஐ.டி காலனி இல்லம், பின்னர் அங்கிருந்து ராஜாஜி அரங்கம் ஆகிய இடங்களுக்கு தனது ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டிச் சென்றவர் இவர்தான். 

2016-ஆம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பொழுதில், அவரது உடலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றதும் சாந்தகுமார்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரு தலைவர்களின் இறுதிப் பயணத்திற்கும் ஒரே நபர்தான்  ஆம்புலன்ஸ் ஒட்டியுள்ளார் என்பது அதிசயத்தக்க வகையில் அமைந்த ஒற்றுமையாகும். 


மக்கள் கருத்து

மக்கள்Aug 10, 2018 - 10:41:55 AM | Posted IP 162.1*****

இது ஒரு செய்தின்னு இதை போட்டுருக்கீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors


Joseph Marketing


crescentopticals



Thoothukudi Business Directory