» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதால் 77 வாகனங்கள் சேதம் : 2 பேர் உயிரிழப்பு

புதன் 8, ஆகஸ்ட் 2018 8:19:32 PM (IST)

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணாசமாதி நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 77 வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி (நேற்று ஆக 7 ம் தேதி) காலமானார் . இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ராஜாஜி அரங்கில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு இரங்கல் தெரிவிக்க ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்கப்படாததை அறிந்த திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது 77 வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்று விவரமும் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

வெகுஜனம்Aug 9, 2018 - 08:42:49 AM | Posted IP 162.1*****

Tax விதிவிலக்கு பெரும் கட்சிகள் இந்த மாதிரி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் போது அந்த நஷ்டத்தை இக்கட்சிகளிடம் இருந்தே வசூலிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


New Shape Tailors

Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam

Joseph Marketing



Thoothukudi Business Directory