» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்மேற்கு பருவமழை தீவிரம் : தமிழகத்தில் அணைகளின் நீர்இருப்பு உயர்வு

வியாழன் 12, ஜூலை 2018 6:51:17 PM (IST)

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின்ள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் 40 சதவீதம் அதகரித்துள்ளது. அதன்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் பத்து நாட்களில் 13 அடி அதிகரித்து 71 அடியாக உள்ளது.தேனி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், 123  அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 122 கன அடியாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 48  அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர் வரத்து ஆயிரத்து 30 கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123 கனஅடியாகவும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 கன அடியாகவும் சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 92 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் உயர்ந்துள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 11 அடி அதிகரித்து 65 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 3 ஆயிரத்து 648 கனஅடியாக உள்ளது. பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing

New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




Thoothukudi Business Directory