» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் டாஸ்மாக் கடையை அகற்ற போராட்டம்: ஒரே இடத்தில் திரண்ட அனைத்துக் கட்சியினர்
வியாழன் 12, ஜூலை 2018 3:47:41 PM (IST)
சென்னையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என எதிர் எதிர் துருவங்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற நடந்த போராட்டம் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரும் மக்கள் எழுச்சி போராட்டம் என்றால் மிகையாகாது. அரசுக்கு எதிராக பெண்கள் ஆவேசமாக களத்தில் குதித்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி தங்கள் ஆவேசத்தை காட்டியதால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. பள்ளிகள், கோவில்கள், கிளீனிக்குகள் கூட குறைவாக இருக்கும், டாஸ்மாக் கடைகள் இல்லாத இடமே இல்லை எனும் அளவில் தெருதோறும் பெட்டிக்கடைகள் போல் டாஸ்பாக் கடைகளை நிறுவியது அரசு. ஒரு தலைமுறையே மதுவால் சீரழிவதைக்கண்ட பெண்கள் விழித்துக்கொண்டனர்.
தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற போராட்டத்தில் குதித்தனர். மதுவுக்கு எதிராக அரசியல்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு இணையாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. இதை பொதுமக்கள் ஆங்காங்கே எதிர்ப்புத்தெரிவித்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில்
சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள சாமி நாயக்கன் தெருவில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் வந்ததை அடுத்து அங்குள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் அந்த கடையின் இன்று காலை ஒன்று கூடினர். கடைமுன் ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என பொதுமக்களுடன் சேர்ந்து வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாமி நாயக்கன் தெருமுனையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் கடை திறப்பதை கைவிடுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி : திருநெல்வேலியில் பரபரப்பு
திங்கள் 18, பிப்ரவரி 2019 1:15:33 PM (IST)

கள்ளக்காதலுடன் சேர்ந்து 1½ வயது மகளை கொலை செய்த இளம்பெண் கைது: பரபரப்பு வாக்குமூலம்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:02:49 PM (IST)

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: கமலுடன் கூட்டணி குறித்து அமைச்சர் பதில்!!
திங்கள் 18, பிப்ரவரி 2019 11:47:01 AM (IST)

கமல்ஹாசனின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்: திமுக நாளிதழ் முரசொலியில் கடும் தாக்கு
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:39:16 AM (IST)

ரஜினி அறிவிப்பால் பாஜகவிற்கு எந்தவித பாதகமும் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்
திங்கள் 18, பிப்ரவரி 2019 8:38:38 AM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்
ஞாயிறு 17, பிப்ரவரி 2019 12:17:52 PM (IST)
