» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிர்மலா தேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வியாழன் 12, ஜூலை 2018 3:40:23 PM (IST)

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரே போலீசார் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத் தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர். நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கூடுதலாக எந்த தகவலையும் சொல்லவில்லை என்றும், செல்போனில் பேசும்போது கூறிய உயர் அதிகாரிகள் யார்? என சொல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரித்தும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார்? என்ற முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பொறுத்தமட்டில் இதுவரை அவர்கள் நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில் கைதான 3 பேர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். 

இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors





crescentopticals



Thoothukudi Business Directory