» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எஸ்வி சேகர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை : உயர்நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 12, ஜூலை 2018 1:45:47 PM (IST)

நடிகர் எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெண்பத்திரிகையாளர்கள் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்து பத்திரிகையாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.மேலும் எஸ்வி சேகரை எதிர்த்து வழக்குகளும் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டது.இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்த வழக்கில்  திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தது.

இதை எதிர்த்து எஸ்வி சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது,பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை.இந்த வழக்கு விசாரணையை 6 வார காலத்திற்கு விசாரிக்க இடைக்கால தடை விதிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Joseph Marketing


Anbu Communications



CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory