» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வன்முறையை தூண்டும் வகையில் பேச்சு: ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனுதாக்கல்!!

திங்கள் 18, ஜூன் 2018 12:50:26 PM (IST)

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே 3 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், நடிகருமான மன்சூர் அலிகான், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார். அப்போது, 8 வழிச்சாலை அமைப்பது குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீஸார் நடிகர் மன்சூர் அலிகான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக மன்சூர் அலிகானை சென்னையில் நேற்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சேலம் கொண்டு வரப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். 


மக்கள் கருத்து

நான் உண்மையான மனிதன்Jun 18, 2018 - 06:56:06 PM | Posted IP 162.1*****

நாட்டில் நடப்பது பார்ப்பன சட்டம் என்றால். பூணூல் அணிந்தவரை கைது செய்யமாட்டார்கள் ..

INDianJun 18, 2018 - 03:14:53 PM | Posted IP 162.1*****

what about Mr S V Sekar ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph MarketingThoothukudi Business Directory