» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பதினெட்டு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தலைமைநீதிபதியின் தீர்ப்பு விபரம்

வியாழன் 14, ஜூன் 2018 7:10:27 PM (IST)

பதினெட்டு எம்எல்ஏக்களும் சபாநாயகர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரபட்சமாக செயல்படுகிறார் என நிரூபிக்க தவறிவிட்டனர் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தெரிவித்தார்.

பதினெட்டு எம்எல்ஏ.,கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.தமது தீர்ப்பில் இந்திராபானர்ஜி தெரிவித்ததாவது, கடந்த 1994ல் அதிமுக எம்எல்ஏ ஜி.விஸ்வநாதன், மதிமுகவுக்கு போனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், கட்சி பொறுப்பை விட்டுக் கொடுக்க அவசியமில்லை, மறைமுகமாக செய்தாலும் தகுதி நீக்கம் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். 18 எம்எல்ஏக்களும் பதிலளிக்க சபாநாயகர் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. 18 எம்எல்ஏக்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என கட்சிக்குள் எழுப்பியதாக எந்த ஆதாரமும் இல்லை.

முதல்வராக வேறு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சபாநாயகரிடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவிக்கவில்லை.அரசியல் சாசனப் பிரிவு 212-ன்படி சட்டமன்றத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில், சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தினாலேயே நீதிமன்றம் தலையிட முடியாது.எம்எல்ஏக்களும் சபாநாயகர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பாரபட்சமாக செயல்படுகிறார் என நிரூபிக்க தவறிவிட்டனர்.இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சாமிJun 18, 2018 - 11:48:54 AM | Posted IP 162.1*****

பேச்சில் மரியாதை திராவிட இயக்கத்தில் கிடையாது போலும்

ராமநாதபூபதிJun 16, 2018 - 05:11:28 PM | Posted IP 162.1*****

அப்போ நீதிபதி சுந்தர் படித்தது என்ன சட்டம். போப்பா போக்கத்தப்பயலே சாமீ இது தான் சட்டமாம்

சாமிJun 15, 2018 - 09:46:24 PM | Posted IP 162.1*****

இதுதான் சட்டம்

ஒருவன்Jun 15, 2018 - 06:53:48 PM | Posted IP 162.1*****

கார்ட்டூன் படத்துல ஒரு டோரா வரும் ல அது இவரா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals
Thoothukudi Business Directory