» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்எல்ஏ.,கள் தகுதிநீக்க வழக்கு முதல்வர் எடப்பாடி,டிடிவி தினகரன் தனித்தனியே ஆலோசனை

வியாழன் 14, ஜூன் 2018 1:23:28 PM (IST)

பதினெட்டு எம்எல்ஏ.,கள் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் 18 எம்எல்ஏ.,கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு தலைமை வழக்கறிஞர் சந்தித்து பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் சந்திப்பு நடைபெற்றது.

இது ஒரு புறமிருக்க சென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் தினகரன்  ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 16 பேர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருடன் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals





New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing



Thoothukudi Business Directory