» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா? புஸ்வாணமாகுமா? தமிழிசை கருத்து

வியாழன் 14, ஜூன் 2018 8:40:39 AM (IST)

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது.

இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம். ராகுல்காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. பதவியை துஷ்பிரயோகம் செய்து காரத்தி ஊழல் செய்ய துணைபோயுள்ளார் ப.சிதம்பரம். தமிழகத்தில் அதிகரித்து வரும செயின் பறிப்பு சம்பவத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors


Joseph Marketing






Thoothukudi Business Directory