» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துாத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு

புதன் 13, ஜூன் 2018 7:04:49 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தவரை, கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம்
அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சமூக விரோதிகள் சிலர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் தான் கலவரம் ஏற்பட்டதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார்.  அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் குறித்து, தவறாக கருத்து தெரிவித்ததாக ரஜினி மீது ஒசூர் காவல் நிலையத்தில்,  சிலம்பரசன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்படாததால், ரஜினி  மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், கோரிக்கை தொடர்பாக கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD





crescentopticals

New Shape Tailors


Joseph Marketing



Thoothukudi Business Directory