» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலா படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம், நடவடிக்கை எடுக்க உத்தரவு!!

புதன் 13, ஜூன் 2018 4:16:24 PM (IST)

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்திற்கு அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். 

இதே போல் தியேட்டர்களில் உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வாகன நிறுத்தக் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவு தொகை வசூல் செய்வதையும் எதிர்த்து வழக்கு போட்டவர். ‘காலா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் வெளியான பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து பின்னர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையில் உள்ள விலையைவிட கூடுதலாக வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

விதிமீறலில் ஈடுபடும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. சில நேரங்களில் சினிமா கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர். வாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

Anbu Communications

Nalam PasumaiyagamJoseph MarketingBlack Forest CakesThoothukudi Business Directory