» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டசபையில் தினமும் வெளிநடப்பு செய்வதற்கு காரணம் தேடும் ஸ்டாலின்: தமிழிசை விமர்சனம்

புதன் 13, ஜூன் 2018 3:33:36 PM (IST)

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக எஸ்.வி.சேகர்  விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எஸ்.வி.சேகர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால்,  அவரை சுதந்திரமாக வெளியே சுற்றித் தெரியுமாறு தமிழக அரசு விட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தி.நகரில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது: நாட்டில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. உதாரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான நேரம் முடிந்தும் கர்நாடகா  இன்னும் செய்யவில்லை. அதை பற்றியெல்லாம் திமுக கவலைப்படவில்லை.

ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்திற்காக திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. இந்த விவகாரம் நீதிமன்றம் தொடர்புடையது. அதனை தமிழக அரசு கவனித்துக் கொள்ளும். ஆனால் இதற்காக வெளிநடப்பு செய்வது என்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Joseph Marketing

crescentopticalsThoothukudi Business Directory