» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார்பள்ளிகளுக்கு விரைவில் புதிய பாடப்புத்தகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன்

புதன் 13, ஜூன் 2018 1:46:48 PM (IST)

தனியார் பள்ளிகளுக்கு 10 நாட்களுக்குள் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுவிடும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் கல்வித்துறையில் புதுப்புது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.இப்பொழுதே பத்தாம்வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அது போல் அரசுத்தேர்வுகள் முதலிடம் பெறுவோர் விபரங்கள் வெளியிடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை மாநகராட்சி எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து பேட்டியளித்த அவர், அரசு  பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing


crescentopticals




New Shape Tailors



Thoothukudi Business Directory