» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அரசை கண்டித்து நாளை தமிழகம் முழுக்க கடையடைப்பு

புதன் 23, மே 2018 4:07:48 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து, தமிழகம் முழுக்க நாளை கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 11 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த நிலையில் போலீஸ் இன்றும் இதே அராஜகத்தை தொடர்ந்துள்ளது. இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

இந்நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் செய்ய இறங்கியுள்ள சமயத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் முழுக்க கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது .தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து , தமிழகம் முழுக்க நாளை கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors


Thoothukudi Business Directory