» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

திங்கள் 21, மே 2018 1:19:15 PM (IST)

அரபிக்கடலில் உருவாகும் மேகுனு எனும் புதிய புயலால் தெற்கு அரபிக்க டலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அரபிக்கடலில், மே, 16 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, புயலாக மாறியது. சாகர் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந்திய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த புயல், இந்தியாவிற்குள் நுழையாமல், எதிர் திசையில் சென்று ஏமன் மற்றும் சோமாலியாவுக்கு மத்தியில் உள்ள ஏடன் வளைகுடாவில் மையம் கொண்டது. அதன் பிறகு கடந்த 19-ந்தேதி சோமாலியாவில் புயல் கரையை கடந்தது. 

அரபிக்கடலில் சாகர் புயல் உருவான அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், இன்னும் மூன்று நாட்களில், தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி செல்லும் என, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. புயலுக்கு மாலத்தீவு நாட்டின் சார்பில் மேகுனு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அதே சமயம் அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory