» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து: ரஜினிகாந்த்

ஞாயிறு 20, மே 2018 9:11:52 PM (IST)எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்று ரஜினிகாந்த் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் கர்நாடக மாநில அரசியல் குறித்து பேசினார். 

கர்நாடக தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்து பேசுகையில், நமது அரசியல் அமைப்பு சட்டப்படி சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டும். அதை நிரூபிக்க போகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்றார். எடியூரப்பா பதவி விலகியதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அவர்கள் செய்து இருக்கக்கூடாது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. அதற்கு எனது வணக்கங்கள் என்றார். 

காவிரி விவகாரம் தொடர்பாக பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கொடுத்தார்களோ அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது (காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம்) கடமை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. காவிரி நீர் பங்கீட்டில் அணைகளின் முழுக் கட்டுப்பாடும் ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால் அது நல்லதல்ல. ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகம் இருப்பார்கள். அரசியல் தலையீடும் நிச்சயம் இருக்கும். எனவே இந்த வி‌ஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை போகத் போகத்தான் பார்க்க முடியும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors
Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Thoothukudi Business Directory