» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி நட்புரீதியாக நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஞாயிறு 20, மே 2018 8:57:18 PM (IST)

ஜூன் 12-ம் தேதி காவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி நட்புரீதியாக பேச்சு நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடை பெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: நீண்ட நாட்களாக பொது மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாக, தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சனையாக உள்ள காவிரிப் பிரச்சனையில் சட்டரீதியாக ஒரு முடிவை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கக் கூடியவற்றை நிறைவேற்ற முன்வருவார்களா, பயன் கிடைக்குமா, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் அடையுமா என்ற நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், இங்கிருக்கும் அரசு என்ன செய்ய வேண்டுமென்றால், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற நிலையில் ஒரு புதிய அரசு பொறுப்பேற்கவிருக்கிறது,

அப்படி புதியதாக பொறுப்பேற்கும் முதல்- அமைச்சரோடு, இங்கிருக்கும் முதலமைச்சர் ஒரு நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு, சட்டரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி பெற வேண்டிய காவிரி நீரை நட்புரீதியாக பெற்றாக வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக நமக்கு வர வேண்டிய நீர் தடைபெற்று இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை நமக்கு வர வேண்டிய நீரை பெறுவதில் தமிழக அரசு தவறினால், மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலை வரும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

காவிரி உரிமைக்காக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தைக் கண்டு, உச்ச நீதிமன்றமே அதற்கு மதிப்பளித்து சட்டரீதியான உரிமையை அளித்திருக்கிறது. ஆகவே, தி.மு.க.வின் போராட்டங்களில் பெருமளவு பங்கேற்று, ஆதரவு தந்திருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து

தமிழன்மே 21, 2018 - 12:45:24 PM | Posted IP 172.6*****

உங்கள் கூட்டணி காங்கிரஸ் உதவியுடன் தானே கர்நாடகாவில் ஆட்சி அமைகிறது...நீங்களே உங்கள் நண்பர் காங்கிரஸிடம் சொல்லி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடச்சொல்லலாமே தலைவரே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Joseph Marketing


crescentopticalsThoothukudi Business Directory